கிளிநொச்சி மாவட்டக் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று மாலை

கிளிநொச்சி மாவட்டக் கல்வி அபிவிருத்திச் செயலணியின் மாவட்டக் கல்வி அபிவிருத்தி தொடர்பான மாதாந்த திறந்த கலந்துரையாடல் 05-09-2017 செவ்வாய்கிழமை மாலை 3.00 மணிக்கு வழமைபோல் மாவட்டச் செயலக பயிற்சி நிலையத்தில் (ஏ 9 சாலை, கூட்டுறவு மண்டபத்திற்கு அருகாமையில்) நடைபெறவுள்ளது.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.ரதிதரன் அவர்கள்
” கல்வித் தேவை அடிப்படை” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார். தொடர்ந்து திறந்த கலந்துரையாடல் இடம்பெற்று மாலை 5.00 மணிக்கு நிறைவடையும்.
இக்கலந்துரையாடலில் மாவட்டக் கல்வி அபிவிருத்தி தொடர்பில் அக்கறையுடன் செயற்படும் அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *